புதிய ஹேர்ஸ்டைலுடன் நிவின் பாலி நடிக்கும் ‘கனகம் காமினி கலாஹாம்’ !

புதிய ஹேர்ஸ்டைலுடன் நிவின் பாலி நடிக்கும் ‘கனகம் காமினி கலாஹாம்’ !

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி. பின்னர் இவர் நயன்தாராவுடன் இணைத்து நடித்த ”லவ் ஆக்ஷன் ட்ராமா” திரைப்படமும் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இதனால் நிவின் பாலிக்கு ஏரளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

புதிய ஹேர்ஸ்டைலுடன் நிவின் பாலி நடிக்கும் ‘கனகம் காமினி கலாஹாம்’ !

தற்போது நிவின் பாலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கனகம் காமினி கலாஹாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. நிவினின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பாலி ஜூனியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட இந்த குழு முழு படப்பிடிப்பையும் ஒரு மாதத்தில் முடித்துள்ளது.

இப்படம் பிளாக் காமெடி கலந்த ஒரு நகைச்சுவை விருந்தாக, ஒரு குடும்ப படமாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் கிரேஸ் ஆண்டனி தம்பதியராக நடிக்கவுள்ளனர். இந்தப்படத்திற்காக நிவின் பாலி நீண்ட கூந்தலுடன் ஒரு புதிய ஹேர்ஸ்டைலை வைத்துள்ளார்.

புதிய ஹேர்ஸ்டைலுடன் நிவின் பாலி நடிக்கும் ‘கனகம் காமினி கலாஹாம்’ !

மேலும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர் 5.25’ புகழ் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இப்படம் சாதாரண மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் எடுத்துரைக்கும் விதத்தில் உள்ளதாம். நடிகர்கள் வினய் ஃபோர்டும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஜாய் மேத்யூ, ‘விக்ருதி’ புகழ் வின்சி அலோஷியஸ், ஜாஃபர் இடுக்கி, சிவதாஸ் கண்ணூர், ராஜேஷ் மாதவன் மற்றும் பலர் துணை நடிகர்களில் ஒரு பகுதியாக உள்ளனர்.

கனகம் காமினி கலாஹாம் தவிர, நிவின் பாலி, படவெட்டு, துரமுகம் மற்றும் பிஸ்மி ஸ்பெஷல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Share this story