நடிகர் நானி படத்திற்கு தடை… பிரபல நடிகை தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் நானி படத்திற்கு தடை… பிரபல நடிகை தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் நானி நடித்த ‘வி’ திரைப்படத்தை ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர் நானி படத்திற்கு தடை… பிரபல நடிகை தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு !

தெலுங்கு திரையுலகில் 12 ஆண்டுகளாக ஹீரோவாக கலக்கி வருபவர் ‘நானி’. இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வி’. இப்படத்தில் முதல்முறையாக வில்லன் கதாபாத்திரம் நானி நடித்துள்ளார். மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சுதீர் பாபு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், அதிதி ராவ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

நடிகர் நானி படத்திற்கு தடை… பிரபல நடிகை தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு !

ஓடிடி தளத்தில் வெளியாகி ‘வி’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் தனது புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் ‘வி’ படத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் படத்தில் பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனத்திலும் சாக்‌ஷி மாலிக் புகைப்படம் உள்ளது.

நடிகர் நானி படத்திற்கு தடை… பிரபல நடிகை தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு !

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சாக்‌ஷி மாலிக். அதில் அனுமதி இல்லாமல் தனது புகைப்படங்கள் ‘வி’ திரைப்படத்தில் இடம்பெற்றது தவறு என்றும், இதற்கு நஷ்டஈடாக ரூ.30 கோடி தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வி’ படத்திலிருந்து சாக்‌ஷி மாலிக் புகைப்படத்தை நீக்கவும், திரைப்படத்தை ஒளிபரப்பவும் தடை விதித்தார்.


Share this story