ஆஸ்கர்-2021, விருதைத் தட்டிச் சென்றவர்களின் பட்டியல் வெளியானது!

ஆஸ்கர்-2021, விருதைத் தட்டிச் சென்றவர்களின் பட்டியல் வெளியானது!

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான ஆஸ்கர் விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 93-வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல தொகுப்பாளர் இல்லாமல் விழா நடைபெற்று வருகிறது. தற்போது வரை பல விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்கர்-2021, விருதைத் தட்டிச் சென்றவர்களின் பட்டியல் வெளியானது!

சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘நோமட்லேண்ட்’ என்ற படத்திற்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்கியது சோலே ஜாவ் என்ற சீன பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நோமட்லேண்ட்’ படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்கர்-2021, விருதைத் தட்டிச் சென்றவர்களின் பட்டியல் வெளியானது!

சிறந்த நடிகருக்கான விருது ‘தி பாதர்’ படத்திற்காக அந்தோணி ஹாப்கின்ஸ் பெற்றுள்ளார்.

‘நோமட்லேண்ட்’ படத்தை இயக்கிய சீன பெண் இயக்குனர் சோலே ஜாவ் சிறந்த இயக்குனர் விருதை வென்றுள்ளார்.

சிறந்த சர்வதேசப் படத்திற்கான விருதை ‘அனதர் ரௌண்ட்’ திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ‘தி சோல்’ படம் வென்றுள்ளது.

சிறந்த காட்சி அமைப்புகளுக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனட்’ திரைப்படம் வென்றுள்ளது.

Share this story