டொரோண்டோ விழாவில் மூன்று விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு!

டொரோண்டோ விழாவில் மூன்று விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு!

பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் டொரோண்டோ தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. 

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு என்ற படத்தை நடித்து, தயாரித்து இயக்கியிருந்தார். படம் முழுக்க இவர் ஒருவர் மட்டுமே தோன்றுவார். மற்ற கதாபாத்திரங்களின் குரல் மட்டும் கேட்கும். பார்த்திபனின் இந்த முயற்சி இந்திய அளவில் கவனம் பெற்றது. ஒத்த செருப்பு படத்திற்கு பல விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்தது.

டொரோண்டோ விழாவில் மூன்று விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு!

தற்போது ஒத்த செருப்பு டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2020-ல், சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருது, சிறந்த திரைப்பட இயக்குனருக்கான ஜூரி விருது மற்றும் சிறந்த சோலோ ஆக்ட் விருது ஆகிய விருதுகள் கிடைத்துள்ளன.

டொரோண்டோ விழாவில் மூன்று விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு!


இதுகுறித்துப் பேசிய பார்த்திபன் கூறுகையில், “பார்வையாளர்களின் ரசனை மட்டுமே சினிமாவின் தரத்தை தீர்மானிக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ‘ஒத்த செருப்பு’ போன்ற ஒரு படத்தை பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. நான் மகிழ்ச்சியடைகிறேன். டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்திற்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளேன். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story