திடீரென லவ் டிராக்கில் போகும் ஓவியா… யார் அந்தக் காதலர்!?

திடீரென லவ் டிராக்கில் போகும் ஓவியா… யார் அந்தக் காதலர்!?

பிக்பாஸ் முதல் சீசன் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளர் என்றால் ஓவியாதான். ஓவியா மீது அதிக பற்று கொண்ட ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று தனியே ஒரு ஆர்மிவையே உருவாக்கினார்கள். பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கியிருந்த ஓவியாவுக்கு பிக்பாஸ் பட வாய்ப்புகளைக் குவியச் செய்தது.
திடீரென லவ் டிராக்கில் போகும் ஓவியா… யார் அந்தக் காதலர்!?
தற்போது ஊரடங்கால் படபிடிப்புகள் இல்லாமல் முடங்கியுள்ள ஓவியா சோசியல் மீடியாக்களில் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடல் நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட “பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா? மாட்டீர்களா? என்று சர்ச்சையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
Oviya Tamil Bigg Boss: Actress summoned by police in suicide ...
தற்போது ஓவியா லவ் ஃமூடில் இருக்கிறார் போல. அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “நாம் காதலிப்பவர்கள் ஒருபோதும் நம்மை விட்டுச் செல்வதில்லை. நாம் பார்க்கமுடியாமலே நம் பின்னால் இருப்பர், அவர்களைப் பற்றி கேட்கமுடியாது. ஆனால் எப்போதும் அருகில் இருப்பர், மிகவும் அன்பாக, மிகவும் பிரிந்தாலும் எப்போதும் நெருக்கமாக இருப்பர்” என்று தெரிவித்துள்ளார்.
இது யாருக்கான லவ் மெசேஜ்! நீங்களே சற்று பின்னோக்கி சென்று பாருங்களேன்!

Share this story