பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்'!

பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்'!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுத்தந்தது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்'!
அடுத்தடுத்து தயாரிப்புப் பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.
இன்னிலையில் நடிகர் கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடித்த ‘குதிரைவால்’ என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்'!
 
குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது.
அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்'!
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக
படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.  இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்'!
 

Share this story