கருப்பு சட்டை, கையில் சிகரெட்.. செம மாஸாக போஸ் கொடுக்கும் சசிக்குமார்…

கருப்பு சட்டை, கையில் சிகரெட்.. செம மாஸாக போஸ் கொடுக்கும் சசிக்குமார்…

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருகிறார் சசிகுமார் . இவர் கைவசம் தற்போது எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இதையடுத்து அவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ .இந்தப்படத்தை ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

கருப்பு சட்டை, கையில் சிகரெட்.. செம மாஸாக போஸ் கொடுக்கும் சசிக்குமார்…

டிசம்பர் 14-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘பகைவனுக்கு அருள்வாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.

ஒளிப்பதிவாளராக கார்த்திக் கே.தில்லை, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக காசி விஸ்வநாதன் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

கருப்பு சட்டை, கையில் சிகரெட்.. செம மாஸாக போஸ் கொடுக்கும் சசிக்குமார்…

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சூர்யா, இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Share this story