காமெடியில் கலக்கும் வரும் “பாரீஸ் ஜெயராஜ்” – சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

காமெடியில் கலக்கும் வரும் “பாரீஸ் ஜெயராஜ்” – சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்று அளித்தவுடன் வரிசையாக படங்கள் ரிலீசாக தயாராகின்றன. அந்த வகையில் சந்தானத்தின் கலாட்டா காமெடியில் உருவாகியுள்ள படம் ‘பாரீஸ் ஜெயராஜ்’. சந்தானத்தின் ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இந்த படத்தை இயக்கியுள்ளார்.

காமெடியில் கலக்கும் வரும் “பாரீஸ் ஜெயராஜ்” – சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்திற்கு வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கடந்த டிசம்பர் 1ம் தேதியே இந்த படத்தின் ஃப்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அடுத்தப்படியாக டிரெய்லரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

காமெடியில் கலக்கும் வரும் “பாரீஸ் ஜெயராஜ்” – சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத சந்தானம், எப்படி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் என்பதுதான் இந்த படத்தின் முழு கதையாக உள்ளது. முழுக்கமுழுக்க காமெடியில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தையொட்டி வரும் பிப்ரவரி 12ம் தேதி திரையரங்குகளில் பாரீஸ் ஜெயராஜ் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story