சந்தானம் காமெடியில் கலக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ டிரெய்லர் வெளியீடு!

சந்தானம் காமெடியில் கலக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ டிரெய்லர் வெளியீடு!

நித்தியை கலாய்த்து வெளியிடப்பட்டுள்ள சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சந்தானம் காமெடி கலாட்டாவில் வெளிவரவிருக்கும் படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. கடந்த ஆண்டு வெளியான ‘A1’ படத்தை இயக்கிய ஜான்சன், இப்படத்தை இயக்கியுள்ளார்.

சந்தானம் காமெடியில் கலக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ டிரெய்லர் வெளியீடு!

கானா இசைப்பாடகராக நடித்துள்ள சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட சந்தானம் படத்தில் அதே காமெடி நடிகர்கள் இதிலும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சந்தானம் காமெடியில் கலக்கும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ டிரெய்லர் வெளியீடு!

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. “நொந்துபோன ஜெயராஜ் வாழ்க்கையில புதுசா ஒரு பெண்ணு வந்துபோனா” என வழக்கமாக சந்தான பட டைலாக்குடன் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் சந்தானம். கடந்த மாதம் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் விரைவில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

Share this story