Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

கௌதம் கார்த்திக், பார்த்திபன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

நடிகர் பார்த்திபன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் துவங்கியுள்ளது.

இயக்குநர் S. எழில் இயக்கத்தில் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கு “புரடக்‌ஷன் நம்பர் 2” என தற்காலிகமாக தலைப்பிட்டுள்ளது. இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது.

படம் குறித்து காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D. விஜய்குமரன் கூறியதாவது….

“படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான காமெடி கலக்கலாக, தியேட்டரில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதை அடித்து கூறுவதாக இருக்கிறது. இயக்குநர் S.எழில் பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். விநியோக தளத்தில் பெரிய அளவில் அவர் கொண்டாப்பட அதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தமிழின் தலைசிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையில் முதன்முறையாக தனது திரைப்பயணத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தபடத்தை இயக்குகிறார் இயக்குநர் S. எழில் ஒரு தயாரிப்பாளராக பெரு மகிழ்ச்சியுடனும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடனும் உள்ளேன். அதிலும் தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது, உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும். அவர்களின் பலம் படத்தை பெரு வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன். இயக்குநராக கதை சொல்லி ரசிகர்களை ஈர்க்கும் விதத்தை தாண்டி, படத்தை ஒரே கட்டமாக படமாக்குவதில் வல்லவராக இயக்குநர் S.எழில் இருப்பது எந்த தயாரிப்பாளருக்கும் பெரிய வரம். படத்தை சுற்றி நிறைய அன்பும் நேர்மறைதன்மையும் சூழ்ந்துள்ள நிலையில் படத்தின் இறுதி வடிவத்தை காண பெரும் ஆவலாக உள்ளேன்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் தாண்டி மேலும் பல முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்குபெறவுள்ளார்கள். பெரும் நட்சத்திர கூட்டம் அலங்கரிக்க, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் இருக்கும்.

இப்படத்தை இயக்குநர் S.எழில் திரைக்கதை எழுதி இயக்குகிறார். பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமார் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். C.முருகேஷ் பாபு இப்படத்தின் வசனமெழுதியுள்ளார். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக N R சுகுமாரன் பணியாற்றுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!