வைரலாகும் பார்த்திபனின் FaceApp போட்டோ!

வைரலாகும் பார்த்திபனின் FaceApp போட்டோ!

FaceApp-ல் தன் புகைப்படத்தை சிறுவன் போல மாற்றியமைத்துள்ளார் பார்த்திபன்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பார்த்திபன். எந்த விஷயம் செய்தாலும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் செய்வது இவரது வழக்கம்.

பார்த்திபன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஒத்த செருப்பு’. அவரே இயக்கி, நடித்து, தயாரித்த இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முழு படத்திலும் ஒருவர் மட்டுமே நடித்தால் போரடிக்காதா என்ற சந்தேகத்தை உடைத்தெறிந்த இந்தப் படத்துக்கு, ஏராளமான விருதுகளும் கிடைத்துள்ளன.

வைரலாகும் பார்த்திபனின் FaceApp போட்டோ!

அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள பார்த்திபன், தன்னைப்போலவே முக அமைப்பு கொண்ட நடிகர்களைத் தேடி வருகிறார். 10 முதல் 50 வயது வரையிலான, கொஞ்சமாவது நடிப்பு அனுபவம் கொண்டவர்கள் தேவை என கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், தனது புகைப்படத்தையே சின்ன வயது பையன் போல மாற்றி வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

FaceApp-ல் தங்கள் புகைப்படங்களை இளம் வயது போல் எடிட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பார்த்திபனும் FaceApp-ல் தனது புகைப்படத்தை சிறுவன் போல எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share this story