பாவனாவை இறந்ததாகக் கூறிய பொதுச்செயலாளர்… ஆவேசத்தில் நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பார்வதி!

பாவனாவை இறந்ததாகக் கூறிய பொதுச்செயலாளர்… ஆவேசத்தில் நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பார்வதி!

நடிகை பார்வதி மலையாளத் திரைப்பட நடிகர் சங்கத்தில்(Association of Malayalam Movie Artists- AMMA)  இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதையடுத்து அந்த ஆண்டிலேயே ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ், மற்றும் ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினர். நடிகை பார்வதி சங்கத்தில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.

பாவனாவை இறந்ததாகக் கூறிய பொதுச்செயலாளர்… ஆவேசத்தில் நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பார்வதி!


2008ஆம் ஆண்டு மலையாள நடிகர் சங்கத்திற்காக நிதி திரட்டுவதற்காக டுவென்டி:20 என்ற படம் நடிகர் திலீப் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக மற்றுமொரு படம் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இடவெல பாபு சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் நடிகை பாவனாவைப் பற்றி தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

Edavela Babu
Edavela Babu


நடிகை பாவனா நடிகர் சங்கம் தயாரிக்கும் படத்தில் நடிப்பாரா? என்ற கேள்விக்கு, “இறந்தவர்களை நாம் மீண்டும் கொண்டுவர முடியாது. கேரள நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக வைத்து மட்டுமே பணம் எடுக்க முடியும். பாவனா நடிகர் சங்கத்தில் இல்லை இது மட்டுமே கூற முடியும்” என்று பதிலளித்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து நடிகை பார்வதி மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“2018ம் ஆண்டில் என்னுடைய நண்பர்கள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய போது, நான் மட்டும் உடைந்த சங்கத்திற்கு வேலை செய்வதற்காகவும், முன்னேற்றம் அடையச் செய்யவும் சங்கத்தில் தொடர்ந்து நீடித்தேன். ஆனால் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நேர்காணலில் அளித்த பதிலைப் பார்க்கும்போது இந்த சங்கத்தில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என்று தோன்றுகிறது. மீண்டும் எனது அனைத்து நம்பிக்கையும் போய்விட்டது. இந்த அமைப்பால் மோசமாக கைவிடப்பட்டு, அதன் விளைவாக சங்கத்தை விட்டு விலகிய ஒரு பெண் உறுப்பினரை ஒரு இறந்த நபருடன் ஒப்பிடுகையில் அவர் முற்றிலும் வெறுக்கத்தக்க மற்றும் மோசமான திருத்த முடியாத கருத்தைத் தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

<!– wp:paragraph –>

Share this story