பவன் கல்யாணைப் படம் எடுத்த இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரசிகர்கள் !

பவன் கல்யாணைப் படம் எடுத்த இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரசிகர்கள் !

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய உண்மை சம்பவங்களை படமாக்கி அதன் மூலம் பிரபலமாகலாம் என்று எண்ணி களத்தில் இறங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் தெலுங்கு ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் வாழ்க்கையைப் படமாக எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
பவன் கல்யாணைப் படம் எடுத்த இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரசிகர்கள் !
நேரடியாக பவன் கல்யாணின் வாழ்க்கையை எடுக்கப்போவதாக அறிவிக்கா விட்டாலும் பவர்ஸ்டார் என்று தலைப்பிட்டு அவர் வாழ்க்கையைத் தான் எடுக்கப்போவதாக குறிப்பு கொடுத்திருந்தார்.. பின்னர் பவர்ஸ்டார் பவன்கல்யாண் மாதிரியே உள்ள ஒருவரை கண்டுபிடித்து அவரை வைத்து படமும் எடுத்து ட்ரைலரும் வெளியிட்டுவிட்டார்.
பவன் கல்யாணைப் படம் எடுத்த இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ரசிகர்கள் !
பவர்ஸ்டார் படத்தின் டிரெய்லரில் பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கி இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை காட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யான் ரசிகர்கள் பவன் கல்யாண் வாழ்க்கையை ராம் கோபால் வர்மா கேலி செய்ததாக எண்ணி அவரது அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். பின்பு அங்கு வந்த போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது ராம்கோபால் வர்மா அந்த அலுவலகத்தின் மாடியில் இருந்ததால் அவர்களிடமிருந்து தப்பி உள்ளார்.

Share this story