குடும்பத்துடன் ‘வக்கீல் சாப்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி…பவன் கல்யானுக்கு வாழ்த்து!..

குடும்பத்துடன் ‘வக்கீல் சாப்’  படத்தை பார்த்த சிரஞ்சீவி…பவன் கல்யானுக்கு வாழ்த்து!..

தனது தம்பியின் படமான‌ ‘வக்கீல் சாப்’ திரைப்படத்தை குடும்பத்துடன் நடிகர் சிரஞ்சீவி திரையரங்குக்கு சென்று பார்த்துள்ளார்.

குடும்பத்துடன் ‘வக்கீல் சாப்’  படத்தை பார்த்த சிரஞ்சீவி…பவன் கல்யானுக்கு வாழ்த்து!..

இந்தியில் வெளியாகி ஹிட்டித்த ‘பிங்க்‘ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி வெளியாகியுள்ளது.’வக்கீல் சாப்’ என்ற‌ பெயரில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பவன் கல்யானின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் அஞ்சலி,நிவேதா தாமஸ்,அனன்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பத்துடன் ‘வக்கீல் சாப்’  படத்தை பார்த்த சிரஞ்சீவி…பவன் கல்யானுக்கு வாழ்த்து!..

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இந்தியை விட தெலுங்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஹிட்டடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாகி உள்ளன.

குடும்பத்துடன் ‘வக்கீல் சாப்’  படத்தை பார்த்த சிரஞ்சீவி…பவன் கல்யானுக்கு வாழ்த்து!..

இதற்கிடையே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சிரஞ்சீவியும், பவன் கல்யானும் சகோதரர்கள் என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம். இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘வக்கீல் சாப்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தனது குடும்பத்துடன் சென்று நடிகர் சிரஞ்சீவி திரையரங்குக்கு சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story