‘சீயான் 60’ படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர்!

‘சீயான் 60’ படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தில் பேட்ட பட நடிகர் முத்துக்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சீயான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முதலில் அனிரூத் தான் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவித்தனர். அதையடுத்து அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

‘சீயான் 60’ படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர்!

இந்தப் படத்தில் நடிகை வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்துள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பேட்ட படத்தில் மாளவிகா மோகனனின் அண்ணனாக நடித்த முத்துக்குமார் தற்போது சீயான் 60 படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சீயான் 60’ படத்தில் இணைந்த பேட்ட பட நடிகர்!

முத்துகுமார் வேட்டை, நகர்வலம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்திலும் முத்துக்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story