ஷாலினியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அஜித்!? வைரலாகும் புகைப்படம்!

ஷாலினியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அஜித்!? வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஒன்றாக இருக்கும் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று மே 1-ம் தேதி அஜித் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.


மே 1-ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தான் சிறிது ஏமாற்றம் ஏற்பட்டது. வழக்கமாக அஜித் தனது பிறந்த நாளை எப்போதும் மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடுவதுண்டு.

ஷாலினியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அஜித்!? வைரலாகும் புகைப்படம்!

ஆனால் இந்த முறை பிறந்தநாள் கொண்டாடினாரா? என்பது தெரிய வரவில்லை. கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அஜித் இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாடவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

ஷாலினியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அஜித்!? வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினி ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது அதை அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வலிமை படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விரைவில் வலிமை படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story