மூன்று குழந்தைகளுடன் செல்வராகவனின் அழகான குடும்பம்… வைரலாகும் புகைப்படங்கள்!

மூன்று குழந்தைகளுடன் செல்வராகவனின் அழகான குடும்பம்… வைரலாகும் புகைப்படங்கள்!

இயக்குனர் செல்வராகவன் தனது குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர். செல்வராகவன் ஆரம்ப காலகட்டத்தில் எடுத்த படங்களில் நடிகை சோனியா அகர்வால் கட்டாயம் இடம் பெற்றிருப்பார். அந்தக் காலகட்டத்தில் தான் இருவருக்கும் காதலாகியது. 2006-ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 4 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.

பின்னர் இருவரும் 2010-ம் ஆண்டு பரஸ்பரம் பிரிந்தனர். அதையடுத்து கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவனின் பிறந்தநாள் அன்று கேக் வெட்டிய புகைப்படங்களுடன் தங்களின் மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தையும் முதன்முறையாக கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Share this story