யுவன் ஷங்கர் ராஜா ஸ்டுடியோவில் ‘வலிமை’ படத்திற்கான இன்ட்ரோ பாடல் உருவாக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் அஜித்துக்காக அசத்தலான கிராமப்புற இன்ட்ரோ பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பாடலுக்காக யுவன் ஒரிசாவைச் சேர்ந்த ட்ரம்ஸ் கலைஞர்கள் பலரை வரவழைத்துள்ளாராம். கூடுதல் சிறப்பாக இந்தப் பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ளார்.

இந்தஸ் செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தது. தற்போது வலிமை இன்ட்ரோ பாடல் உருவாக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படத்தில் யுவன், விக்னேஷ் சிவன் மற்றும் டிரம்ஸ் கலைஞர்களைப் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போனி கபூர் “வலிமை படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 15-ஆம் தேதி நிறைவடைவதாகவும், மீதமிருக்கும் சண்டைக் காட்சிகள் விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன, படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.