பிசாசு 2-ல் விஜய் சேதுபதி … அவருக்கு என்ன கேரக்டர் தெரியுமா ?

பிசாசு 2-ல் விஜய் சேதுபதி … அவருக்கு என்ன கேரக்டர் தெரியுமா ?

பிசாசு 2 படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிசாசு 2-ல் விஜய் சேதுபதி … அவருக்கு என்ன கேரக்டர் தெரியுமா ?

மிஷ்கின் படம் என்றாலே ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது. அவர் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. வழக்கமான பேய் படம்போல் இல்லாமல், காதல், சென்டிமென்ட் கலந்து வித்தியாசமான கதையை உருவாக்கியிருந்தார் மிஷ்கின். இதில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் பிசாசு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

பிசாசு 2-ல் விஜய் சேதுபதி … அவருக்கு என்ன கேரக்டர் தெரியுமா ?

இதையடுத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் மிஷ்கின். முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி நடிக்கிறார். மேலும் ‘சவரக்கத்தி’ பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிசாசு 2-ல் விஜய் சேதுபதி … அவருக்கு என்ன கேரக்டர் தெரியுமா ?

தற்போது பிசாசு 2 படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என்றாலும், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என மிஷ்கின் தெரிவித்துள்ளாராம். இதனால் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி, 5 நாட்கள் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம். பிசாசு 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story