விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்… பிரபல பாலிவுட் நடிகை விருப்பம் !

விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்… பிரபல பாலிவுட் நடிகை விருப்பம் !

மீண்டும் தமிழில் விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்… பிரபல பாலிவுட் நடிகை விருப்பம் !

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு எந்த தமிழ் படங்களில் நடிக்காத பூஜா ஹெக்டே, டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். முன்னணி ஹீரோயினாக வலம் வரும் பூஜா ஹெக்டே படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்… பிரபல பாலிவுட் நடிகை விருப்பம் !

இதையடுத்து தெலுங்கில் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து ‘சர்கஸ்’ பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்… பிரபல பாலிவுட் நடிகை விருப்பம் !

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட ஆசை என்றும், விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன் என பூஜா ஹெக்டே கூறியுள்ளார். இதனிடையே விஜய் 65 படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share this story