விஜயைத் தொடர்ந்து ஜார்ஜியா பறந்த பூஜா ஹெக்டே!

விஜயைத் தொடர்ந்து ஜார்ஜியா பறந்த பூஜா ஹெக்டே!

விஜயைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா பறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தான் விஜய் ஜார்ஜியா பார்ப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவின.

தற்போது விஜயைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா பறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பூஜா மும்பை ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜயைத் தொடர்ந்து ஜார்ஜியா பறந்த பூஜா ஹெக்டே!

ஜார்ஜியாவில் படக்குழுவினர் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜார்ஜியாவை அடுத்து சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பைத் தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜயைத் தொடர்ந்து ஜார்ஜியா பறந்த பூஜா ஹெக்டே!

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட், டோலிவுட் என முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி 65 படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜயைத் தொடர்ந்து ஜார்ஜியா பறந்த பூஜா ஹெக்டே!

இவர்களுடன் அபர்ணா தாஸ், கவின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் கோரியோகிராப் செய்கின்றனர். விஜய் இந்தப் படத்தில் அண்டர்கவர் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story