பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய பூனம் பாஜ்வா வாங்கப் போகும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய பூனம் பாஜ்வா வாங்கப் போகும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமா வட்டாரங்கள் தகவலின்படி, நடிகை பூனம் பஜ்வா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-ல் சீசனில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அய்யர் ஆத்துப் பெண்ணாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். பின்னர் கச்சேரி அரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்புத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது அடிக்கடி படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய பூனம் பாஜ்வா வாங்கப் போகும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கு கிளாமரான நடிகைகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வரிசையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கிளாமரான நடிகைகள் முதல் வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். நடிகை பூனம் பாஜ்வா பிக்பாஸ் சீசன் 4 தெலுங்கில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு ரூ 45 லட்சம் சம்பளம் பெறப்போகிறாராம் பூனம் பாஜ்வா!

Share this story