பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்!

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்!

குழந்தை நட்சத்திரம் பூவையார் கபீஷ் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் இணைந்துள்ளார்.

பிரசாந்த் தற்போது தனது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன் திரைப்படம்.

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்!

அந்தகன் படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, ப்ரியா ஆனந்த், லீலா சாம்சன், வனிதா விஜயகுமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட குட்டி நட்சத்திரம்!

தற்போது இந்தப் படத்தில் பூவையார் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவையார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் பூவையார் நடித்திருந்தார். தற்போது அந்தகன் படத்திலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story