பிரபல நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு!

பிரபல நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு!

பிரபல பாலிவுட் நடிகர் மாதுர் மிட்டல் மீது பாலியல் துன்புறுத்தலின் கீழ் மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த பிறகு மாதுர் மிட்டல் பாலிவுட்டில் பிரபலமானார். தற்போது மும்பை காவல்துறை மாதுர் மிட்டல் தனது முன்னாள் காதலியைத் துன்புறுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு!

சமீபத்திய அறிக்கையின்படி, மாதுர் மிட்டல் தனது முன்னாள் காதலியை காயப்படுத்தியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 13 ஆம் தேதி நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மாதுர் மிட்டல் தனது முன்னாள் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரைப் பாலியல் ரீதியாக தாக்கி துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Share this story