சூப்பர் ஹிட் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபாஸ்!?

சூப்பர் ஹிட் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபாஸ்!?

ஹாலிவுட் ஹிட் ராம்போ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபாஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

டோலிவுட் நடிகர் பிரபாஸ் தற்போது இந்தியாவின் ஸ்டார் நடிகராக மாறியுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு பாண் இந்தியா படங்களை கை வசம் வைத்திருக்கிறார் பிரபாஸ்.

சமீபத்திய அப்டேட் என்னவென்றால், பிரபாஸ் தற்போது மிகப்பெரிய பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹிட் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபாஸ்!?

ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டலோனின் அதிரடி ஆக்ஷன் படமான ராம்போவின் இந்தி ரீமேக் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் முதலில் பாலிவுட் நடிகர் டைகர் ஷிராஃப் தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் அந்தப் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபாஸ்!?

தற்போது பிரபாஸ் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கவிருக்கிறார்.

சித்தார்த் ஆனந்த் தற்போது ஷாருக் கான் நடிப்பில் ‘பதான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்திற்குப் பின்னர் ராம்போ படத்தின் இந்தி ரீமேக் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Share this story