பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா ?

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா ?

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடனம், நடிப்பு, டைரக்ஷன் என மூன்றிலும் கலக்கி வருபவர் நடன இயக்குனர் பிரபுதேவா. இந்தியில் பிசியாக உள்ள இவர், அவ்வெப்போது தமிழ் படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா ?

பிரபுதேவா முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவர இருக்கும் படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவாவின் 50வது படமான இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கியிருக்கிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் கொரானா காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை.

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா ?

இந்நிலையில் குலேபகாவலி இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story