மஞ்சப்பை இயக்குனர் படத்தில் பிரபுதேவா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…

மஞ்சப்பை இயக்குனர் படத்தில் பிரபுதேவா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…

டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா புதிய படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

மஞ்சப்பை இயக்குனர் படத்தில் பிரபுதேவா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…

நடனம், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைக்கொண்டு திரையுலகில் கலக்கி வருகிறார் பிரபுதேவா. இந்தி படங்களை இயக்கிவரும் பிரபுதேவா, தமிழில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பொன் மாணிக்கவேல் ஊமை விழிகள், பகீரா என வரிசையாக மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் பிரபுதேவா. இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக தயாராகி வருகிறது.

மஞ்சப்பை இயக்குனர் படத்தில் பிரபுதேவா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…

இந்நிலையில் பிரபுதேவா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மஞ்சப்பை, காடன் படங்களை இயக்கிய ராகவன் இந்த படத்தை இயக்குகிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க உள்ள இந்த படத்தில் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

மஞ்சப்பை இயக்குனர் படத்தில் பிரபுதேவா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபுதேவா, நடிகை ரம்யா நம்பீசன், இயக்குனர் ராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

Share this story