நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் நடிகைகளாலும் திரையில் ஜொலிக்க முடியும் என்பதற்கான முதல் சான்றாய் அமைந்தவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக பயணிக்க ஆரம்பித்தார்.

இவர் தற்போது இந்தியன் 2 , ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ப்ரியா பவானி பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர் எப்போது புகைப்படங்கள் வெளியிட்டாலும் ஆக்டிவ் மோடிற்கு வந்து அதை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

தற்போது ப்ரியா ஷங்கர் மஹாராணி ஒப்பனையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
