சதீஷுக்கு செம கலாய் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்!

சதீஷுக்கு செம கலாய் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்!

தன் பதிவுக்கு கமெண்ட் அடித்த சதீஷுக்கு ப்ரியா பவானி சங்கர் அளித்துள்ள பதில் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.

நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கொஞ்சம் ஜாலியாக இருப்பவர். அவரது சோசியல் மீடியா கமெண்டுகளை வைத்தே நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு “இப்போ நான் என்ன நினைக்கிறன்!?” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று சதீஷ் கமெண்ட் அடித்தார்.

அதற்கு பதிலளித்த ப்ரியா சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அப்டி சொல்லாதீங்க கோபால்” என்று நக்கலாக பதிலளித்துள்ளார். ப்ரியா பவானி ஷங்கரின் இந்த ரிப்ளை ட்விட்டரில் பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Share this story