“நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன் சார்”… வைரலாக ப்ரியா பவானி சங்கரின் பதில்!

“நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன் சார்”… வைரலாக ப்ரியா பவானி சங்கரின் பதில்!

தனது பதிவிற்கு ஒருவர் அளித்துள்ள கமென்டிற்கு பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

“நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன் சார்”… வைரலாக ப்ரியா பவானி சங்கரின் பதில்!

நடிகை ப்ரியா பவானி ஷங்கரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

ப்ரியாவின் இந்தப் பதிவிற்கு ஒருவர் பதில் அளித்திருந்தார். “சகோதரி முதல்வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது… அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்..2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது” என்று தெரிவித்திருந்தார்.

அந்த நபருக்கு பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர் “take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை” என்று ரிப்ளை கொடுத்தார். அவரின் இந்தப் பதில் ட்விட்டரில் கவனம் பெற்று வருகிறது.

Share this story