Monday, April 12, 2021

கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்… சூப்பர் ஸ்டாராக மாறும் சிம்பு!

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாநாடு...

Movie Stills

தவறி விழுந்த ‘கண்ணழகி’ ப்ரியா வாரியர்… பதறிய ரசிகர்கள்…

ஷூட்டிங்கின்போது நடிகை ப்ரியா வாரியர் தவறி விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 3 மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ப்ரியா வாரியர். ‘அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர்.இந்த படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடல் யூடியூப்பில் டிரெண்ட்டானதை தொடர்ந்து புகழ்பெற்றார். அந்தப் பாடலில் ப்ரியா வாரியரின் கண் சிமிட்டல் இளைஞர்களை மனம் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘செக்’. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தில் நிதின், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது ஹீரோ நிதினின் முதுகில் ஏறுவதற்கு பதிலாக தவறி கீழே விழுந்துள்ளார்‌ ப்ரியா வாரியர். இந்த நிகழ்வில் அவருக்கு எந்த காயமும்‌ ஏற்படவில்லை.

இந்த காட்சிகளை வீடியோவாக தற்போது ப்ரியா வாரியர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நிறைய ‌கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஷூட்டிங்கில் பாதுகாப்பாக இருக்கும்படி ரசிகர்கள் அன்பு கட்டளையிட்டுள்ளனர் . இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Latest Posts

கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்… சூப்பர் ஸ்டாராக மாறும் சிம்பு!

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாநாடு...

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ்....

வெற்றிமாறன்-சூரி படத்தின் புதிய அப்டேட்..

வெற்றிமாறன் - நடிகர் சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன்...

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வரும் உதயநிதி…படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம்...

Actress

TTN Cinema