ஓடிடி வெளியீடு குறித்து தியேட்டர் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாரான தயாரிப்பாளர் சங்கம்!

ஓடிடி வெளியீடு குறித்து தியேட்டர் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாரான தயாரிப்பாளர் சங்கம்!

தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எதாவது ஒரு விதத்தில் மோதல் நடந்துகொண்டே தான் வருகிறது. முதலில் விபிஎப் கட்டணம் தொடர்பாக மோதல் எழுந்தது. தற்போது படங்கள் ஓடிடி வெளியீட்டு கால அவகாசம் குறித்து ஏற்பட்டுள்ளது.

தற்போது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“23.02.2021 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.

23.02.2021 செவ்வாய்கிழமை அன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.இராமசாமி ( எ ) முரளி. செயலாளர் திரு.மன்னன், பொருளாளர் திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் முன்னால் தலைவர்களான திரு.கே.முரளிதரன், திரு.எஸ்.ஏ.சந்திரசேகரன் . திரு.கலைப்புலி எஸ்.தாணு, திரு. கேயார். திரு.ஏ.எல்.அழகப்பன் மற்றும் முன்னால் செயற்குழு உறுப்பினர் திருமதி.கமீலா நாசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஓடிடி வெளியீடு குறித்து தியேட்டர் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாரான தயாரிப்பாளர் சங்கம்!

1. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து OTT Release மற்றும் திரைப்படங்கள் வெளியீடு குறித்து ஒரு கலந்தாய்வு கூட்டம் (Joint Meeting) நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அக்கூட்டத்திற்கான தேதி கூடிய விரைவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துடன் பேசி முடிவு செய்யப்படும்.

ஓடிடி வெளியீடு குறித்து தியேட்டர் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாரான தயாரிப்பாளர் சங்கம்!

2. Digital Service Provider- களுடன் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து VPF Charges குறித்து ஒரு கலந்தாய்வு கூட்டம் ( Joint Meeting ) நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அக்கூட்டத்திற்கான தேதி கூடிய விரைவில் முடிவு செய்யப்படும்.
திரைப்படங்களின் படப்பிடிப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகத்துடன் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும், நிர்வாகிகள் இணைந்து ஒரு கலந்தாய்வு கூட்டம் (Joint Meeting) நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அக்கூட்டத்திற்கான தேதி கூடிய விரைவில் முடிவு செய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story