ஹே! நாங்க திரும்ப வந்துட்டோம்…மீண்டும் இணையும் ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி!

ஹே! நாங்க திரும்ப வந்துட்டோம்…மீண்டும் இணையும் ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி!

பியார் பிரேமா காதல் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண், யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனர் எலன் ஆகியோர் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்திருந்தார். ஹரிஷ்- ரைசா இருவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பாக வரவேற்கப்பட்டது. இந்தப் படத்தை யுவன் தான் தயாரித்தார்.

ஹே! நாங்க திரும்ப வந்துட்டோம்…மீண்டும் இணையும் ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி!

தற்போது பியார் பிரேமா காதல் கூட்டணி மீண்டும் இணைய உள்ளனர். ஆம், ஹரிஷ், யுவன் மற்றும் வேலன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது.

“இப்படம் பியார் பிரேமா காதல் மாதிரியான ரொமான்ஸ் காமெடி படமாக இருக்காது. அப்படத்தை விட அதிகமான பாடல்கள் இப்படத்தில் இருக்கும்.” என்று இயக்குனர் எலன் தெரிவித்துள்ளார்.

ஹே! நாங்க திரும்ப வந்துட்டோம்...மீண்டும் இணையும் 'பியார் பிரேமா காதல்' கூட்டணி!

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். “யுவன் படத்திற்கு இசையமைக்கத் துவங்கிவிட்டார். ஆனால் இப்படத்திற்கு இசையமைக்க பாங்காக்கிற்குச் சென்றிருந்தோம். தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாடு செல்வது தற்போது சாத்தியமில்லை.

இப்படம் 2021 பிப்ரவரி மாதம் கடைசியில் துவங்க இருக்கிறது. சென்னை, மும்பை மற்றும் ஊட்டி ஆகிய படங்களில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். 2021-ல் படத்தை ரிலீஸ் செய்வோம் என்றும் நம்புகிறோம்” என்றும் எலன் தெரிவித்துள்ளார்.

Share this story