விக்ரம் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

விக்ரம் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

நடிகை ராஷி கண்ணா விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று(30-11-2020) நடிகை ராஷி கண்ணா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

விக்ரம் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

நேற்று தனது பிறந்தநாளன்று ராஷி கண்ணா சில மரக்கன்றுகள் நட்டுள்ளார். இனி தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளாராம்.

தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தார்.

விக்ரம் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!?

தற்போது விக்ரம் படத்தில் ராஷி கண்ணா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. (கமல் நடிக்க இருக்கும் விக்ரம் படம் அல்ல. நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் படம். குழப்பம் வேண்டாம்.!)

விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.

Share this story