தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழுவினர் ஸ்பெஷல் ட்ரீட்!

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழுவினர் ஸ்பெஷல் ட்ரீட்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இன்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழுவினர் பிரபாஸின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் பிரபாஸ் மின்னும் அழகுடன் புன்னகைக்கிறார்.

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழுவினர் ஸ்பெஷல் ட்ரீட்!

நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. மேலும் இந்தக் கதை ஐரோப்பாவில் நடக்கும் காதல் காவியம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக. இந்தப் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தென்னிந்திய வெர்ஷனுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை மாதம் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் பிரபாஸ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்திலும் நடிக்கவுள்ளார். அதையடுத்து நாஜி அஸ்வின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

Share this story