அறிமுக இயக்குனருடன் கைகோர்த்துள்ள ராகவா லாரன்ஸ்!

அறிமுக இயக்குனருடன் கைகோர்த்துள்ள ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் தமிழில் பெரிய உயரத்தை எட்டியுள்ளார். குரூப் டான்சராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய லாரன்ஸ் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக வளர்ச்சியடைந்தார். பின்னர் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார். லாரன்ஸின் முனி சீரிஸ் படங்கள் கோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றவை.

அறிமுக இயக்குனருடன் கைகோர்த்துள்ள ராகவா லாரன்ஸ்!

அக்ஷய் குமாரை வைத்து லக்ஷ்மி பாம் என்ற படத்தை எடுத்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துவிட்டார்.

ராகவா லாரன்ஸ் தற்போது அறிமுக இயக்குனர் கே பி செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.

அறிமுக இயக்குனருடன் கைகோர்த்துள்ள ராகவா லாரன்ஸ்!

லாரன்ஸ் நாளை(அக்டோபர் 29) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடித்து வருகிறார். பி வாசு இயக்குகிறார்.

Share this story