ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை கொடிகட்டிப் பறப்பது சோனுசூட் தான் !

ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை கொடிகட்டிப் பறப்பது சோனுசூட் தான் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து மக்களிடையே நிஜ ஹீரோ ஆனார். இதனால் இவருக்கு லட்சகணக்காக இருந்த ரசிகர்கள் கோடிக்கணக்கான மாறினர்.

சில தினங்களுக்கு முன்னர் , சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த தகவல் வெளியாகி மெய்சிலிற்கவைத்தது.

ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை கொடிகட்டிப் பறப்பது சோனுசூட் தான் !

இப்படி நாளுக்கு நாள் நன்மைகளை செய்துவரும் சோனு சூட்டை நாம் ஏதாவது ஒரு வழியில் கௌரவிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் விரும்பியது. அதனடிப்படையில் ரயில்வே நடைபாதைகளை கவனமின்றி கடக்கும் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விபரீதம் தெரியாமல் ரயில்வே ட்ராக் கடப்பதால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் அவற்றை கடப்பதற்கு பாலங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை குறித்தும் பயணிகளுக்கு அறிவுறுத்தும் விதமாக சோனு சூட்டின் குரலை பதிவு செய்து ரயில்வே நிர்வாகம் அற்புதமான ஒரு செயலிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் இனி ரயில்வே நிலையங்களில் சோனு சூட்டின் குரலை கேட்கலாம்.

Share this story