அதிரடியாக களமிறங்கும் சசிக்குமார்… வெளியானது ‘ராஜவம்சம்’ டிரைலர்…

அதிரடியாக களமிறங்கும் சசிக்குமார்…  வெளியானது ‘ராஜவம்சம்’ டிரைலர்…

இயற்கையை பற்றி பேசும் சசிகுமாரின் ராஜவம்சம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடியாக களமிறங்கும் சசிக்குமார்…  வெளியானது ‘ராஜவம்சம்’ டிரைலர்…

கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கிற படம் ‘ராஜவம்சம்’. இயக்குனர் சசிக்குமார் நடிக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்கிறார். ஆக்ஷன், அதிரடியாக உருவாகியுள்ள இப்படத்தை கே.வி.கதிர்வேலு இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

அதிரடியாக களமிறங்கும் சசிக்குமார்…  வெளியானது ‘ராஜவம்சம்’ டிரைலர்…

கலர்புல்லாக பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் நடிகர் ராதாரவி, விஜயகுமார், தம்பி ராமைய்யா, யோகிபாபு, ரமேஷ் கண்ணா என பலர் நடித்துள்ளனர். செந்தூர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசையை சாம் சிஎஸ் கவனிக்கிறார்.

அதிரடியாக களமிறங்கும் சசிக்குமார்…  வெளியானது ‘ராஜவம்சம்’ டிரைலர்…

இந்நிலையில் ராஜவம்சம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அதில் “ப்லுக்ல ஜெயிக்கிறவனுக்கு அது கொண்டாட்டம்… போராடிய ஜெயிக்கிறவனுக்கு அது சம்பவம்” என சசிகுமார் பேசும் வசனங்கள் பட்டைய கிளப்பியுள்ளது. இயற்கை பாதுகாப்பு, குடும்ப உறவுகள் என பல விஷயங்களை இயக்குனர் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story