மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தத் தயாராகும் ரஜினி, அஜித்!

மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தத் தயாராகும் ரஜினி, அஜித்!

ரஜினியின் அண்ணாத்த மற்றும் அஜித்தின் வலிமை என இரு படங்களும் தீபாவளிக்கு மோதிக் கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இமான் இசையமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தத் தயாராகும் ரஜினி, அஜித்!

‘அண்ணாத்த’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தத் தயாராகும் ரஜினி, அஜித்!

ஏற்கனவே 2019-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் மோதிக் கொண்டன. இரு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது மீண்டும் இருவரும் பாக்ஸ் ஆபீஸ் மோதல் நடத்தத் தயாராகி வருவதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தத் தயாராகும் ரஜினி, அஜித்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து எச். வினோத் -அஜித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் வலிமை படத்திற்கும் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே அண்ணாத்த படத்துடன் வலிமை மோதினால் அது வலிமையான போட்டியாக இருக்கும். இவ்வாறு நடந்தால் இந்தாண்டில் கோலிவுட்டை ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான தீபாவளி தான்!

Share this story