இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் ‘அண்ணாத்த’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் ‘அண்ணாத்த’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…

அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் படக்குழு வேகமாக பணியாற்றி வருகிறது.

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் ‘அண்ணாத்த’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும்‌ ‘அண்ணாத்த’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் ‘அண்ணாத்த’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…

வரும் தீபாவளிக்கு ரிலீசாகும்‌ என‌ அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ‌ஷூட்டிங் கடந்த டிசம்பரில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வந்த இந்த ஷூட்டிங்கில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடிக்கும் பாடல் காட்சியும், ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது.

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் ‘அண்ணாத்த’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அங்கு ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் ஷூட்டிங்கில் இன்று ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார். இந்த ஷூட்டிங் 30 நாட்கள் வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story