”தலைவர் வேற லெவல்”… சூப்பர் ஸ்டாரை புகழ்ந்த பிரபல காமெடி நடிகர்…

”தலைவர் வேற லெவல்”… சூப்பர் ஸ்டாரை புகழ்ந்த பிரபல காமெடி நடிகர்…

தலைவருடன் நடிக்கும்போது வேற லெவல் எனர்ஜி கிடைப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

”தலைவர் வேற லெவல்”… சூப்பர் ஸ்டாரை புகழ்ந்த பிரபல காமெடி நடிகர்…

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும்‌ ‘அண்ணாத்த’ படத்தின் பணிகளை வேகமாக செய்து வருகிறார் சிறுத்தை சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

”தலைவர் வேற லெவல்”… சூப்பர் ஸ்டாரை புகழ்ந்த பிரபல காமெடி நடிகர்…

வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்தது. இதையடுத்து தற்போது ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் 30 நாட்கள் வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த ஷூட்டிங்கில் ரஜினியுடன் காமெடி நடிகர் சூரியும் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார்.இந்த படத்தில் சூரியுடனான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ‘அண்ணாத்த’ படம் குறித்து புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி வெளியிட்டுள்ளார்.அதில் ‘தலைவர் ஷூட்டிங் ஸ்பாட்ல கலக்குறாரு’ என ரஜினியுடனான முதல் படத்தில் நடித்த அனுபவத்தை தெரிவித்துள்ளார். இதோடு தலைவருடன் இருக்கும்போது வேற லெவல் எனர்ஜி கிடைக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.‌

Share this story