மீண்டும் துவங்கிய ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் வெளியிட்ட படக்குழு …

மீண்டும் துவங்கிய ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் வெளியிட்ட படக்குழு …

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் துவங்கிய ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் வெளியிட்ட படக்குழு …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். படத்தின் இசை பணிகளை டி.இமான் கவனித்து வருகிறார். கிராமத்து கதையம்சத்தில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர்.

மீண்டும் துவங்கிய ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் வெளியிட்ட படக்குழு …

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இரண்டு மாதம் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது குறித்து ரஜினியிடம் இயக்குனர் சிவா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ‘அண்ணாத்த’ படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மீண்டும் துவங்கிய ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் வெளியிட்ட படக்குழு …

இந்நிலையில் நாட்கள் குறைவாக இருப்பதால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்யவேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளது.இந்த சூழ்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் இன்று மீண்டும் துவங்கியுள்ளது. முதல் நாளே ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஷூட்டிங் ஒருமாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பிறகு கிளைமேக்ஸ் காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story