நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு கவுரவிப்பு !

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு கவுரவிப்பு !

நடிகர் ரஜினிகாந்த்துக்கு 51வது தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு கவுரவிப்பு !

இந்தியாவின் ‘சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்பவர் ரஜினிகாந்த். இந்திய திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகராக உள்ள இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ‘பில்லா’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு கவுரவிப்பு !

இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ள கலைஞன். ஒரு சதாரணமாக கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தவர். இவரின் சாதனைகளை வார்த்தைகளால் எளிதில் சொல்ல முடியாது. உலகளவில் ஏராளமான ரசிகர்கள் வைத்துள்ள ஒரே நடிகர், இவராகதான் இருக்க முடியும்.

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு கவுரவிப்பு !

இந்த ஒப்பற்ற நடிகருக்கு ஏராளமான விருதுகள் ஏற்கனவே குவிந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் தாதா சாகேப் விருதுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 51வது ஆண்டுக்கான இந்த விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சாதனை புரிந்ததற்கு ரஜினிக்கு இந்த விருதை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Share this story