ரஜினி – லதா தம்பதிக்கு திருமண நாள்… வாழ்த்தும் பிரபலங்கள் !

ரஜினி – லதா தம்பதிக்கு திருமண நாள்… வாழ்த்தும் பிரபலங்கள் !

இன்று 40வது திருமணநாளை கொண்டாடும் ரஜினி – லதா தம்பதிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி – லதா தம்பதிக்கு திருமண நாள்… வாழ்த்தும் பிரபலங்கள் !

இந்தியாவே திரும்பி பார்க்கும் நடிகராக இருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஒரு சாதாரண நடத்துனராக தொடங்கிய இவரின் வாழ்க்கை பயணம் பல சாதனைகளை செய்து சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளது. தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மொத்த இந்தியாவையே கட்டிப்போட்டுள்ளார்.

ரஜினி – லதா தம்பதிக்கு திருமண நாள்… வாழ்த்தும் பிரபலங்கள் !

பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த்துக்கு கடந்த 1981-ம் ஆண்டு இதே நாளில் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. லதாவை கரம்பிடித்த ரஜினிக்கு எளிய முறையிலேயே திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துக்கொண்டு மணமணக்களை வாழ்த்தினர். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.

ரஜினி – லதா தம்பதிக்கு திருமண நாள்… வாழ்த்தும் பிரபலங்கள் !

திரையுலகில் மட்டுமல்ல, தனி மனித வாழ்க்கையிலும் சாதனை படைத்துள்ள ரஜினி- லதா தம்பதி இன்று தங்களது 40வது திருமண நாளை கொண்டாடி வருகின்றன. இந்த திருமண நாளை தனது வீட்டில் இன்று சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். திருமண நாளை கொண்டாடும் தம்பதியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. ரஜினி – லதா தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story