16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்!

16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவர் நடித்து வரும் படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இரு படங்களும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திரையில் மோதிக் கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

தமிழ் சினிமாவின் 70, 80, 90களில் ஏன் தற்போது வரை கூட தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகளாக திகழ்ந்து வரும் தமிழ் சினிமா ஆளுமைகள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். அதுவும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் சொல்லவா வேண்டும். தியேட்டர்கள் முழுக்க அதகளம் தான்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்!

1983-ம் ஆண்டு முதல் தான் இவர்கள் இருவரும் திரையில் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். 1983-ம் வருடம் தீபாவளி தினத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தூங்காதே தம்பி தூங்காதே படமும், ரஜினிகாந்த் நடிப்பில் தங்கமகன் படமும் வெளியாகியுள்ளது.

இரு படங்களுமே வெற்றி பெற்றது. குறிப்பாக சொல்லப்போனால் தங்கமகன் படம் 100 நாட்களும், தூங்காதே தம்பி தூங்காதே படம் 170 நாட்கள் ஓடியதாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து 1984-ம் ஆண்டு தீபாவளிக்கு, கமல் நடிப்பில் எனக்குள் ஒருவன் படமும், ரஜினி நடிப்பில் நல்லவனுக்கு நல்லவன் படமும் வெளியாகியுள்ளது. இரு படங்களில் ரஜினி நடித்த நல்லவன்னுக்கு நல்லவன் திரைப்படம்175 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றுள்ளது.

அதையடுத்து இரண்டு வருடம் கழித்து 1986-ம் ஆண்டு தீபாவளி தினத்தில் ரஜினி நடிப்பில் படிக்காதவன் படமும், கமல் நடிப்பில் ஜப்பானில் கல்யாணராமன் படமும் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ரஜினியின் படிக்காதவன் திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

பின்னர் 1987-ம் ஆண்டு தீபாவளியில் ரஜினி தனது சொந்தத் தயாரிப்பில் மாவீரன் படத்தை வெளியிட்டார். கமல் கே பாலசந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படத்தை வெளியிட்டார். இருந்து படங்களில் புன்னகை மன்னன் படம் தான் வெற்றி பெற்றது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்!

1991-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் தளபதி படம் வெளியானது, கமல் நடிப்பில் குணா திரைப்படம். இரு படங்களில் தளபதி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதையடுத்து 1992-ம் ஆண்டு தீபாவளியில் கமல்ஹாசன் தன் சொந்தத் தயாரிப்பில் தேவர் மகன் படத்தை வெளியிட்டார். ரஜினி நடிப்பில் பாண்டியன் திரைப்படம் வெளியானது. இரு படங்களில் தேவர் மகன் படம் இமாலய வெற்றி பெற்றது நம் அனைவர்க்கும் தெரியும்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்!

1995-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் முத்து திரைப்படமும், கமல் நடிப்பில் குருதிப் புனல் திரைப்படமும் வெளியானது. முத்து திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கொள்ளும் ரஜினி, கமல்!

இதன்பிறகு இருவரும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மோதிக் கொண்டனர். 2005-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியானது. ரஜினி நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சந்திரமுகி படம் 700 நாட்கள் ஓடி வரலாற்று வெற்றி பெற்றது.

அதையடுத்து தற்போது தான் இருவரும் மோதிக் கொள்வதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. அப்படி நடந்தால் உண்மையிலே தீபாவளி கொண்டாட்டம் கலை கட்டும் தான். பொறுத்திருந்து பார்ப்போம்!

Share this story