ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெளியாகி வரும் உற்சாக அறிவிப்புகள்!

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெளியாகி வரும் உற்சாக அறிவிப்புகள்!

நீண்ட நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘அண்ணாத்த’. படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ், வேல ராமமூர்த்தி, பிரகாஷ் ராஜ், ஜார்ஜ் மரியான் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெளியாகி வரும் உற்சாக அறிவிப்புகள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜனவரி மாதம் முதல் ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது டிசம்பர் மாதம் 15-ம் தேதியே அண்ணாத்த படத்தின் படபிடிப்பு துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் முழு கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் பாதிக்கு மேல் படப்பிடிப்பு மீதமுள்ளதாம்தாம்.

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வெளியாகி வரும் உற்சாக அறிவிப்புகள்!

ரஜினி ஜனவரி மாதம் கட்சி துவங்க இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில் அண்ணாத்த படம் அதனால் பாதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. அதற்கு “அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுப்பது எனது கடமை” என்று ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story