Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

ஐந்து மொழிகளிலும் கொமாராம் பீமாக கர்ஜிக்கும் ராம் சரண்!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

முதலில் ராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் பகுதியின் டீசர் வெளியாகியது. அந்த டீசருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது தற்போது கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் டீசர் வெளியாகியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is jr-ntr-in-rrr-23-1024x576.jpg

தனது தம்பியான கொமரம் பீமின் பெருமைகளைக் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்

கொமாரம் பீமின் குரலாக, அண்ணன் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் திரையில் கர்ஜிக்கிறார்.

“அவன் எதிரே நின்னா கடல் புயலே அடங்கும்..

பேரச் சொன்னா சிகரத்துக்கே தொடை நடுங்கும்..

அவன் இதயத்துடிப்பு கொடியோட படபடப்பு..

அவனோட திமிரு இருட்ட வேட்டையாடுற கதிர்

பூமியோட தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவன்

புரட்சியாய் எழுந்தவன்..

என் தம்பி
காட்டுக் கரும்புலி- கொமரம் பீம்……”

இப்படி பீமாக கர்ஜிக்கும், ராம் சரணுக்கு அறிமுகம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. நாடறிந்த ஸ்டார் ஹீரோ அல்லவா அவர்.

சீதாராம ராஜூ, தெலுங்கு தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். கொமரம் பீம், தெலுங்கானாவின் வீரர். இவர் நிசாம் மன்னர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர். இந்த இரண்டு வீரர்களின் வாழ்க்கை தான் இப்படத்தின் உயிர்நாடி. ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜூவாகவும், என்டிஆர் கொமரம் பீமாவாகும் ரசிகர்களை குதூகலிக்க வருகின்றனர். ராம் சரணின் பிறந்தநாளையொட்டி கடந்த மார்ச் மாதம் அல்லூரி சீதாராம ராஜூவின் டீஸர் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிட்டியது.

இதோ இப்போது, RRR குழுவினர், என்டிஆரின் கொமரம் பீம் டீஸரை வெளியிட்டுள்ளனர். ராம் சரணின் குரலில் அறிமுக உரை வெளியாகிறது. இத்திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுவதால் ராம் சரண் குரலிலேயே அனைத்து மொழிகளிலும் அறிமுக உரை வெளியாகிறது.

ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் இன்னும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். படத்தை டிவிவி தனய்யாவின் இவிவி என்டெர்டெய்ன்மென்ட் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கிறது. கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ .450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!