ஷங்கர் படத்தில் முதலமைச்சராக நடிக்கும் ராம் சரண்!?

ஷங்கர் படத்தில் முதலமைச்சராக நடிக்கும் ராம் சரண்!?

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கும் தெலுங்கு படத்திற்காக தயாராகி வருகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஷங்கர் தன் படங்களில் எப்போதும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்தே கதை அமைத்திருப்பார். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் சாமானியர்களை எப்படி பாதிக்கிறது என்பதை ஷங்கர் படங்கள் கதைக்களமாகக் கொண்டிருந்ததால் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஷங்கர் படத்தில் முதலமைச்சராக நடிக்கும் ராம் சரண்!?

தற்போது ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் படமும் சமூகப் பிரச்சினைகளைக் கையாளுவதாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் ராம் சரண் துடிப்புமிக்க இளம் முதலமைச்சராக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் படத்தில் முதலமைச்சராக நடிக்கும் ராம் சரண்!?

ஷங்கர் படங்கள் எப்போதும் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக நீண்ட காலம் எடுக்கப்படும் என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால் இந்தப் படம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படவேண்டும் என்று தயாரிப்பாளர் ஷங்கருக்கு கண்டிஷன் போட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் படத்தை முடித்துக் கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுளள்து.

ராம் சரண் தற்போது நடித்து வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அந்தப் படம் வெளியான உடன் ஷங்கர் படம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Share this story