“கொரோனாவ அழிக்க பாஹுபலிய கூப்பிடுங்க”… ராஜமௌலியை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!

“கொரோனாவ அழிக்க பாஹுபலிய கூப்பிடுங்க”… ராஜமௌலியை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!

அண்மையில் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் SS ராஜமௌலி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான செய்திகள் வெளியாகின. டோலிவுட்டின் மஹதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
“கொரோனாவ அழிக்க பாஹுபலிய கூப்பிடுங்க”… ராஜமௌலியை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!
“எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதுவே பின்னர் குறைந்துவிட்டது. ஆனாலும் நாங்கள் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். ரிசல்ட் தற்போது வந்திருக்கிறது. அது எங்களுக்கு லேசான கொரோனா பாசிட்டிவ் என காட்டி இருக்கிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.


எங்கள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அனைவரும் நலமாக இருக்கிறோம். ஆனாலும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம். எங்களுக்குள் ஆன்டிபாடி உருவாகும் வரை காத்திருக்கிறோம். அதன் பிறகு நாங்கள் பிளாஸ்மா தானம் செய்ய இருக்கிறோம்” என ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“கொரோனாவ அழிக்க பாஹுபலிய கூப்பிடுங்க”… ராஜமௌலியை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!
உங்களைப் பாதித்த கொரோனா நோயை அழிக்க உங்கள் பாஹுபலி வீரரை அழையுங்கள். ஜோக்கிற்கு அப்பால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன்” என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.


ராம் கோபாலின் இந்தப் பதிவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் கூட ஒருவரை கேலி செய்வது அவசியமா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share this story