நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் ராணா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கும் வெப் சீரிஸ் !

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் ராணா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கும் வெப் சீரிஸ் !

நடிகர் ராணா டகுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து ஒரு வெப் சீரிஸில் நடிகை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ராணா மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவருமே மிகப்பெரிய சினிமா புன்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இருப்பினும் இருவரும் தங்கள் திறமை கொண்டே பல்வேறு பட வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். பாஹுபலி ஒரு படமே போதும் ராணாவின் திறமையைப் பற்றி சொல்ல. அதேபோல் ஸ்ருதி ஹாசன் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முகத்திறமை கொண்டவர்.

தற்போது ராணா மற்றும் ஸ்ருதி இருவரும் நெட்பிலிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் தெலுங்கில் வெளியானாலும், இதர 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு என்று கூறப்படுகிறது. மேலும் 10 எபிசொட்கள் கொண்ட த்ரில்லர் சீரிஸாக உருவாக இருக்கிறது.

ராணா பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஸ்ருதி ஹாசன் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்தில் நடித்து வருகிறார்.

Share this story